• Jun 30 2024

கரெக்டா பத்த வச்சிங்க ரோகிணி.. முத்து கழுத்துக்கு வரப்போகும் கத்தி! மனோஜுக்கும் ஆப்பு

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஸ்ருதியின் அம்மா ஹோட்டலில் ரவியை விடாமல்  பேசிக்கொண்டு இருக்க, அடுப்பில் வைத்தது கருகிவிட்டது. இதை தொடர்ந்து அந்த இடத்துக்கு வந்த மேனேஜர், யார் அது? ஏன் இப்படி கத்திட்டு போறாங்க? உன்ட திறமையால தான் உன்ன  வச்சிருக்கன், அப்படி இல்லன்னா உன்ன வேலையை விட்டு தூக்கிடுவேன், இனி இப்படி நடக்க கூடாது என திட்டி விட்டுப் போகிறார்.

இதை அடுத்து வீட்டுக்கு வந்த ரவி ஸ்ருதியிடம்,  நீ தான் உங்க அம்மா கிட்ட ஹோட்டலுக்கு போய் பேச சொன்னியா? இப்படியா வந்து இரிடேட் பண்ணுவாங்க, கொஞ்சம் என்றா என்ட  வேலை போய் இருக்கும் அப்படி என்று திட்டுகிறார். பதிலுக்கு ஸ்ருதியும்  ரவியை திட்டுகிறார்.

மறுபக்கம் ரோகிணியும் அவரது நண்பியும் பாலருக்கு செல்வதற்காக ஆட்டோ பிடிக்க, அங்கு முத்துவின் ஆட்டோ  வருகிறது. ரோகிணி அவரைப் பார்த்து கார் எங்க போச்சு என சந்தேகத்துடன் ஆட்டோவில் செல்கிறார்.


போகும் வழியில் தனது நண்பியிடம் காரை பற்றி விசாரிக்குமாறு சொல்ல, அதை பார்த்த முத்து செல்வத்திற்கு போன் பண்ணி, என்ட  கார் ஒருவாரம் கல்யாணத்துக்காக விட்டு இருக்கன். அவங்க ஆட்டோவ தான் வாங்கி ஓடுறேன் அப்படி என்று சொல்லி சமாளிக்கிறார்.

அதன் பின் ரோகிணியும் அவரது நண்பியும் இறங்கி விட்டுச் செல்ல, முத்துவை பார்த்த நபர் ஒருவர் என்ன முத்து உன்ட  நிலைமை இப்படி ஆகிடுச்சு? காரை வித்திட்டியே அப்படி என்று கதைக்க, அதை மறைந்து இருந்து ரோகினி கேட்கிறார்.

இதை அடுத்து மீண்டும் வீட்டுக்கு சென்று நடந்தவற்றை மனோஜிடம் சொல்ல, மனோஜ் அவன் என்னவோ பண்ணிட்டு போகட்டும் என சொல்லவும், மனோஜ்க்கு திட்டி விட்டு அது உங்க அப்பா வீட்டு பத்திரத்தை வச்சு கொடுத்த காசு, அவர் காரை வித்து இருந்தா காசு எல்லாம் வீட்டுக்குத்தான் கொடுத்து இருக்கனும் என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து விஜயாவிடமும் சென்று நடந்தவற்றை சொல்லி ஏற்றி விடுகிறார்.

விஜயா முதலில், அவன் என்னமோ பண்ணிட்டு போறான் என்று சொல்ல, ரோகிணி நீங்க அந்த காச எப்படி கொடுத்தீங்க தெரியுமா?  என்று சொல்லி அவருக்கும் நன்றாக ஏற்றி விடுகிறார்.

அதன்பின்,  நான் இனி சும்மா விட மாட்டேன் என்று விஜயா சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோடு


Advertisement

Advertisement