• Jun 28 2024

சன் டிவியில் புதிய மெகா சீரியல்.. ’சூரிய வம்சம்’ நடிகை தான் நாயகி.. 2 சீனியர் நடிகைகள்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒரு சில புதிய சீரியல்கள் ஆரம்பிக்க உள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக ’ஆபீஸ்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்த ஸ்ருதி மற்றும் விஜய்யின் நண்பர் சஞ்சீவ் நடிக்க உள்ள புதிய சீரியல் விரைவில் தொடங்க இருப்பதாகவும் ’லட்சுமி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த சீரியலின் புரமோ வீடியோ வெளியாகி இருக்கிறது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சன் டிவியில் இன்னொரு புதிய தொடர் ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. ’அன்பே வா ’ என்ற சீரியல் விரைவில் முடிவடைய இருக்கும் நிலையில் அதற்கு பதிலாக ஒரு சீரியல் சன் டிவியில் ஆரம்பமாக இருப்பதாகவும் இந்த சீரியலை சரிகம என்ற நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.



இந்த புதிய சீரியலுக்கு ’மல்லி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சீரியலில் நாயகி ஆக நிகிதா ராஜேஷ் என்பவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் ’சூரிய வம்சம்’ ’அருந்ததி ’உள்ளிட்ட சீரியல்களை நடித்த நிலையில் ’மல்லி’ சீரியல் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

மேலும் நிகிதா ராஜேஷ் உடன் சீனியர் நடிகைகளான நளினி, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க இருப்பதாகவும் இந்த சீரியல் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த சீரியல் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் புரமோ வீடியோ வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே நிகிதா ராஜேஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் இந்த சீரியல் நல்ல வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement