சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அனேகமாக ஒரு மாதத்திற்கு உள்ளேயே மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் ஆயிரம் கோடியை வசூலித்த படமாக கூலி திரைப்படம் இருக்க வேண்டும் என்ற திட்டத்தோடு லோகேஷ் கனகராஜ் அனைத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி வருகின்றாராம். இதனால் தமிழில் மட்டும் இல்லாமல் பிற மொழி நடிகர்களையும் இந்த படத்தில் களம் இறக்கி உள்ளார்.
தெலுங்கில் இருந்து நாகர்ஜுனா, மலையாளத்தில் இருந்து சௌபின் சாஹிர், கன்னடத்தில் இருந்து உபேந்திரா என பல மொழிகளிலிருந்து முன்னணி நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். மேலும் அமீர் கான் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகின்றது.
மேலும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கேமியா ரோலில் வர இருப்பதாகவும், அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் குத்தாட்ட பாடல் ஒன்றுக்கு நடனமாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில் கூலி படத்தின் வசூல் ஆயிரம் கோண்டியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இதன் டிஜிட்டல் ரைட்ஸை வாங்குவதற்கு netflix நிறுவனம் கேட்கின்ற அமௌண்டை கொடுக்க தயாராக உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Listen News!