தமிழ் சினிமாவில் ஒரு தனி முத்திரை பதித்த நடிகர் சிலம்பரசன், தனது அடுத்த படத்திற்கான திட்டங்களை வலுவாக உருவாக்கி வருகிறார். சமீபத்தில், ‘டிராகன்' படத்திற்காக வாழ்த்துகளை தெரிவித்து, அதன் இயக்குநருக்கும் படக்குழுவிற்கும் நன்றியையும் தெரிவித்தார். ஆனால், அதற்குப் பிறகு அவரது அடுத்த படமான STR 51 பற்றிய தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. இதனால், STR ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது வெளிவந்த தகவலின்படி, STR 51 ஒரு மிகப்பெரிய படம் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. பெரிய தயாரிப்பு நிறுவனமும், பிரபல இயக்குநரும் இணைவார்கள் என்ற தகவல்கள் அடிப்படையில் இந்தப் படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
STR 51 படத்தை யார் இயக்கப்போகிறார்கள்? என்பதே ரசிகர்கள் கேட்கும் கேள்வியாக உள்ளது. சில தகவல்களின்படி, முன்னணி இயக்குநர்களில் ஒருவர் இந்தப் படத்தை இயக்கலாம் எனக் கூறப்படுகிறது. STR ஏற்கெனவே கௌதம் மேனன், வெங்கட் பிரபு, சுசீந்திரன், ஹரி போன்ற பல்வேறு இயக்குநர்களுடன் இணைந்து வேலை செய்துள்ளார். எனவே, STR 51 படத்தை யார்? இயக்கப் போகின்றார்கள் என்பதில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்கள்.
தற்போது வெளிவந்த தகவலின்படி, STR 51 ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் வாய்ப்புகள் அதிகம் என ரசிகர்கள் தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!