• Jan 18 2025

அசுர வளர்ச்சியில் ஹீரோவாக களமிறங்கும் கூல் சுரேஷ்.. இரண்டு ஹீரோயின்கள் வேறு..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தளங்களில் தனது youtube சேனல் மூலம் பைக் ரைடிங், பைக்கில் வீலிங் சாகசங்கள் செய்து அதனை வீடியோவாக பதிவிட்டு அதன் மூலம் ஏராளமான இளம் ரசிகர்களை தனது பக்கம் கவர்ந்தவர் தான் டிடிஎஃப் வாசன். இவர் ரவீனா தாகா, ஜி பி முத்து உள்ளிட்ட பிரபலங்களை தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு பயம் காட்டும் விதத்தில் வெளியிட்ட வீடியோக்கள் ஏறாளாம்.

மேலும் சாலை விதிகளை மதிக்காமல் அதி வேகமாக பைக் ரைடிங் செய்து அடிக்கடி போலீசாரால் கைது  செய்யப்பட்டு சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்வார். இவர் பைக்கில் சாகசம் செய்த போது ஏற்பட்ட விபத்துக்களால் கை, கால், முகம் போன்ற பகுதிகளில் பலத்த காயமும் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு யூடியூப் பிரபலம் என்கிற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் மஞ்சள் வீரன் படத்தின் ஊடாக ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் செல்அம் இயக்குகின்றார். இந்த படம் பற்றிய அதிகாரபூர்வமான அறிவிப்பும் போஸ்டரும் ஏற்கனவே வெளியானது. ஆனாலும் சமீபத்தில் இதன் இயக்குனர் டிடிஎஃப் வாசன் படத்திற்கு முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை. இதனால் அவரை படத்தில் இருந்து நீக்கி உள்ளதாக தெரிவித்து இருந்தார்.


இதை தொடர்ந்து இயக்குனருக்கும் டிடிஎஃப் வாசனுக்கும் தொடர்ச்சியாக வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் வாசன் ஆம்பளையாக இருந்தால் நேரில் வர சொல்லுங்கள் பேசலாம் என இயக்குனர் சவால் விட்டிருந்தார்.

இந்த நிலையில், மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக பிக் பாஸ் பிரபலமும் காமெடி நடிகருமான கூல் சுரேஷ் ஹீரோவாக களம் இறங்கி உள்ளார். இவருக்கு ஜோடியாக இரண்டு ஹீரோயின்கள் நடிக்க உள்ளார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றைய தினம் பூஜை உடன் ஆரம்பிக்கப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றதோடு சுரேஷ் பேட்டியும் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement