• Jan 18 2025

எனது அரசியல் கட்சியின் பெயர் சிஎஸ்கே.. விஜய் கட்சியுடன் கூட்டணி.. காமெடி நடிகர் அறிவிப்பு..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

காமெடி நடிகர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர் கூல் சுரேஷ் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதாக பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலில் ஏற்கனவே எம்ஜிஆர், சிவாஜி முதல் கமல்ஹாசன் வரை பல நடிகர்கள் அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார்கள் என்பதும் சமீபத்தில் கூட விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த நிலையில் விஷால் உட்பட இன்னும் சிலர் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த பிக் பாஸ் போட்டியாளர் மற்றும் காமெடி நடிகர் கூல் சுரேஷ்  புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும் அந்த கட்சிக்கு கூல் சுரேஷ் கட்சி என்றும் சிஎஸ்கே என சுருக்கமாக அழைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது கட்சி விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கூட்டணி வைக்கும் என்றும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எங்கள் கூட்டணி தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.



அதுமட்டுமின்றி எனது கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கின்றதோ அந்த கட்சிதான் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஆட்சியைப் பிடித்தவுடன் மக்களுக்கு நல்லது செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிப்பது பொதுமக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் என்றும் ஏற்கனவே கூல் சுரேஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் இயங்கி வரும் நிலையில் அரசியல் கட்சியாக மாறினால் இன்னும் அதிக மக்களுக்கு நன்மை செய்யலாம் என்பதற்காக தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை என்றும் தனது கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சி தலைவருக்கு முதல்வர் பதவி ஆவதற்கு உதவி செய்வோம் என்றும் அவர் கூறியுள்ளார். கூல் சுரேஷ் காமெடியாக கூறுகிறாரா அல்லது சீரியஸாக கூறுகிறார் என்று அவரது பேட்டியில் இருந்து தெரியவில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement