• Jan 20 2025

கூட இருக்குறவங்களுக்கே உதவி செய்ய மாட்டார்.. இவரெல்லாம் முதலமைச்சரா? விஜய்யை கலாய்த்த காமெடி நடிகர்..

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தன்னுடன் இருப்பவர்களுக்கே உதவி செய்ய மாட்டார், அப்படி இருக்கும்போது இவர் முதலமைச்சர் ஆகி மக்களுக்கா உதவி செய்யப் போகிறார்? என்று காமெடி நடிகர் ஒருவர் கலாய்த்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் 2026 ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார். மேலும் அவரது கட்சி ஒரு சில கட்சிகளுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சிக்கு பெரிய அளவில் திரையுலகில் இருந்து ஆதரவு இல்லை என்பதும் பிரபல நடிகர்களே விஜய்யின் அரசியல் கட்சிக்கு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்த நடிகர் கிளிமூக்கு ராமச்சந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய்யை கலாய்த்து உள்ளார். 100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் யாரும் கஷ்டப்படும் நடிகர்களுக்கு உதவி செய்வதில்லை என்றும் குறிப்பாக விஜய் தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களின் கஷ்டத்தை கூட போக்குவதற்கு உதவி செய்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

திரையுலகில் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்யாத விஜய், அரசியலில் நுழைந்து மக்களுக்கா உதவி செய்ய போகிறார்? என்றும் அவர் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement