• Apr 03 2025

விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை சீரியல் தான் பிளாக் பாஸ்டர் ஹிட்! ஆனா நான் அதுக்கு தகுதி இல்லாதவன்! செல்வம் பகீர்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

இந்த சீரியலில் முத்து மற்றும் மீனாவின் கதாபாத்திரங்கள் ரசிகர்களால் ரசிக்கப்படும் வண்ணம் மிக எளிமையாகவும் காதல் கதையை கொண்டு சுவாரஸ்யமாகவும் நகர்கிறது.

இந்த சீரியலில் முத்துவுக்கு நண்பராக வருபவர் தான் செல்வம். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் அவர் கூறுகையில்,

திருமதி டைரக்ஷன் பண்ணின சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் தான் விஜய் டிவில நம்பர் ஒன். இப்போ அது சூப்பர் ஹிட் ஆகுது.


அந்த சீரியல்ல முத்துவுக்கு ஃப்ரெண்டா செல்வம் என்ற கேரக்டரில் நான் நடிக்கிறன். ஆனா அந்த கேரக்டருக்கு நான் எந்த அளவுக்கு பொருத்தமானவன் என்று எனக்கு தெரியல.

ஆனாலும் என் மேல நம்பிக்கை வைத்து அந்த டைரக்டர் எனக்கு கொடுத்தாரு. இதனால குமரன் சாருக்கு தான் நான் நன்றி சொல்லணும்.

ஏன்னா ஹீரோவுக்கும் எனக்கும் ரொம்ப வயசு டிஃபரண்டா இருக்கும். அந்த கதைப்படி பாத்தீங்கன்னா எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை இருக்கும். ஆனா அந்த ஹீரோக்கு ஒரு ஃப்ரெண்டா இருப்பேன்.

ஆனா அந்த சீரியலை செல்வம், முத்து ரெண்டு பேருக்கும் இடையிலான காம்பினேஷன் ரொம்ப சூப்பரா இருக்கு என இப்ப சொல்றப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று பேசியுள்ளார்.

Advertisement

Advertisement