• Jan 19 2025

காசுக்கு ஆசைப்பட்டு ரம்பா புருஷன் செய்த காரியம்! ஒரு கோடி ரூபா ஆஃபரில் வந்த தமன்னா? உண்மையை உடைத்த பிரபலம்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்த அரங்கில் தென்னிந்திய பின்னணி பாடகர் ஹரிஹரன் அவர்களது இசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியானது தென்னிந்திய நடிகை ரம்பாவின் கணவரான இந்திரன் அவர்களது Northern Uniயினால் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் ரம்பா, யோகி பாபு, பாலா,சாண்டி மாஸ்டர், புகழ், தமன்னா,  சஞ்சீவ், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், திவ்யதர்ஷினி, ஆலியா மானசா, நந்தினி, மகாலட்சுமி, கலா மாஸ்டர் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்கு பற்றி இருந்தார்கள்.

இந்த நிகழ்ச்சி ஆனது கடந்த டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நிலையில், அசாதாரண காலநிலை மாற்றம் காரணமாக பிப்ரவரி ஒன்பதாம் தேதிக்கு பிற்போடப்பட்டது. 

இதில் பங்கு பற்ற இலவச டிக்கெட் என ஆரம்பத்தில்  அறிவிக்கப்பட்ட  போதிலும், பின்னர் 25000, 7000, 3000 ரூபாய் மற்றும் பின்னால் நின்று பார்ப்பவர்களுக்கு இலவசம் என்று  அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு மக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் வெறுப்பினையும் ஏற்படுத்தியது. 


இதைத்தொடர்ந்து அங்கு வந்த ரசிகர்களால் ஏற்பட குழப்பத்தினால் சிறிது நேரம் தடைபட்ட, இந்த நிகழ்ச்சி ஒரு மாதிரியாக நடந்து முடிந்தது.

இந்த நிலையில், இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அளித்துள்ள பேட்டியில், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இங்கிருந்து சென்ற அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வந்தார்கள், அதற்கு முழுக் காரணம் ரம்பாவின் கணவர் இந்திரன் தான். 

இந்த இந்திரன் யார் என்றால் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர், கனடாவில் பெரிய தொழிலதிபர். நடிகைகள் வழக்கம் போல தொழிலதிபரை திருமணம் செய்து கொள்வார்கள் என்பதால், ரம்பா இருந்த புகழுக்கு இவரை திருமணம் செய்து கொண்டார்.


இவர் தனது சொந்த ஊரான இலங்கையில் ஹரிஹரன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார். இந்த நிகழ்ச்சி முற்றிலும் இலவசம் என்ற அறிவித்துவிட்டு, அதன் பின் இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், இதை கமர்ஷியலாக ஏன் மாற்றக்கூடாது என நினைத்து தமன்னாவை அழைத்து இருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியில் தமன்னா கலந்து கொள்ள ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கிறார். இதையடுத்து நாற்பதாயிரம், பத்தாயிரம், ஐந்து ஆயிரம் என டிக்கெட் கட்டணமாக நிர்ணயித்துள்ளார். 

மேலும், 40 ஆயிரம் கட்டணம் பெற்றவர்கள் தமன்னாவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என்ற புது ஆபரை கொடுத்துள்ளார். 

இப்படி இலங்கையில் நடந்த முழு பிரச்சனைக்கும் முக்கிய காரணம் ரம்பா கணவரின் பணத்தாசை தான் என்று செய்யாறு பாலு அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement