• Mar 28 2023

நிலா பாப்பாவுடன் சேர்ந்து எழில் செய்யும் சேட்டைகளைப் பாருங்க- வாவ் ... ரொம்ப கியூட்டான அப்பா, பொண்ணாக இருக்கிறாங்களே?

stella / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளவர் தான் விஜே விஷால். இந்த சீரியலில் இவர் நடித்து வரும் எழில் என்னும் கதாப்பாத்திரத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகிய இவருக்கு தற்பொழுது வெள்ளித்திரையிலும் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் அண்மையில் இவர் நடித்த ஆல்பம் பாடல் ஒன்று வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.


தற்பொழுது குக்வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும் பங்கு பற்றி வருகின்றார்.இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நிலா பாப்பாவாக நடித்து வரும் குழந்தையுடன் சேர்ந்து விளையாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.


இதனைப் பார்த்த ரசிகர்கள் அடடே இருவரும் சொந்த அப்பா பிள்ளை மாதிரியே இருக்கு எனக் கூறி வருவதோடு இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement