• Apr 20 2024

வடசென்னை படம் இத்தனை மணி நேரம் நீளம் கொண்டதா?- புது அப்டேட்டைக் கொடுத்த இசையமைப்பாளர்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் எந்தக் கதாப்பாத்திரமாக இருந்தாலும் அதில் சிறப்பாக நடிக்கக் கூடிய நடிகர் தான் தனுஷ். இவர் இயக்குநர் வெற்றிமாறனது இயக்கத்தில் நடித்த அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணியில் கடந்த 2018ம் ஆண்ட வெளியாகிய திரைப்படம் தான் வடசென்னை. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.


இதில் அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.தற்போது ரசிகர்கள் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வடசென்னை படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்படம் குறித்து பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.


அதில் அவர், " வெற்றி மாறன் ஒரு முறை வடசென்னை படத்தின் மொத்த காட்சியையும் என்னிடம் போட்டு காட்டினார். மொத்த படத்தின் நீளம் மட்டும் 5 மணி நேரம் இருந்தது. இதில் அனைத்தும் மிக அழகாக இருந்தது" என்று கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement