• Nov 27 2025

சந்திரலேகா சீரியல் நடிகை இரட்டை குழந்தைகளுக்கு தாயா? அவரே வெளியிட்ட புகைப்படங்கள்! குவியும் வாழ்த்துகள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஸ்வேதா, சன்டிவியின் சந்திரலேகா சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார்.

கடந்த 2007 ஆண்டு வெளியான ஆழ்வார் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஸ்வேதா பண்டேகர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இறுதியாக ஜெயம் ரவியின் பூலோகம் படத்தில் நடித்திருந்தார்.


இதை தொடர்ந்து, சன்மியூசிக் சேனலில் விஜேவாக இருந்த மால் மருகன் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது. சமீபத்தில் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவிழா நடத்தியுள்ளனர். இதில் ஆண் குழந்தைக்கு கிரிதன் கிருஷ்ணா என்றும் பெண் குழந்தைக்கு, சர்வஸ்ரீ என்றும் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், முதல் முறையாக தனது குழந்தைகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.தற்போது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.





Advertisement

Advertisement