• Jan 19 2025

மொத்தமாக டார்கெட் செய்யப்பட்ட விச்சு - அர்ச்சனா! எல்லை மீறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 தற்போது தான்மேலும் சூடுபிடித்துள்ளது. நாளுக்கு நாள் கொடுக்கப்படும் டாஸ்கள், சண்டைகள், திருப்பங்கள் என பரபரப்பாக நகர்ந்து செல்கின்றது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வஸ்டு ஃபர்பாமெர்ஸ்  இருவரை தெரிவு செய்யுமாறு கூறியிருந்த நிலையில், விசித்ரா மற்றும் அர்ச்சனாவை குறிவைத்து சொல்லியிருந்தனர்.  

இதை தொடர்ந்து  மணியிடம் பேசிய விசித்ரா 'என்னடா இப்படி முதுகுல குத்திட்டிங்க' என்று சொல்ல அர்ச்சனாவும் முதுகுல குத்திட்டீங்க என்று சேர்ந்து சொல்கிறார். இதற்கு வெளியில் இருக்கும் பூர்ணிமா பிக் பாஸ் சீக்கிரமா அவங்கள ஜெயிலுக்கு அனுப்புங்க என்று சொல்லி இருந்தார்.


இவ்வாறான நிலையில், விசித்ரா, அர்ச்சனா இரண்டு பேரும் வெளியில் உட்கார்ந்து கொண்டு கேப்டன் தினேஷிடம் நாங்க வஸ்டு ஃபர்பாமெர்ஸ் என்பதை ஏத்துக்க முடியல அதனால் நாங்கள் ஜெயிலுக்கு போக முடியாது என்று கூறுகின்றனர். தினேஷ் மற்ற ஹவுஸ் மேட்ஸ்களை அழைத்து அவங்க சாப்பிடுறாங்க சாப்பிடல ஓரமா வைக்கிறாங்க அத பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனா அவங்க உள்ள வரக்கூடாது நான் ஸ்மால் ஹவுஸ்க்குள்ள அவங்களை விட போறது இல்ல அங்கு இருந்து எழுந்திருச்சா நேரா ஜெயிலுக்குதான் என்று சொல்கிறார்.

இவ்வாறு பிக் பாஸ் வீட்டிலுள்ள மொத்த போட்டியாளர்களும் இணைந்து விசித்ராவை குறி வைப்பது போல அவரை ஜெயிலுக்கு அனுப்பி உள்ளனர். மேலும் விசித்ரா தான் அர்ச்சனாவையும் சேர்ந்து பாதுக்காப்பாக வழிநடத்துவதாகவே ஏனையோரின் பார்வை உள்ளது.இதன் காரணமாகவே மொத்தமாக விசித்ராவை டார்கெட் செய்துள்ளனர். 

Advertisement

Advertisement