2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டது. ஆனாலும் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்படும் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். மங்காத்தா படத்திற்கு பிறகு இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்கள். இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
விடாமுயற்சி படத்தின் சென்சார் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்பு வெளியிடப்பட இருந்தது. ஆனால் கிறிஸ்மஸ் விடுமுறை என்பதால் வெளிநாட்டில் சென்சார் வாங்குவதில் சிக்கல் எழுந்து உள்ளதாகவும் கூறப்பட்டது.
d_i_a
இந்த நிலையில், விடாமுயற்சி படத்திற்கு நாளைய தினம் சென்சார் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக வலைப்பேச்சு அந்தணன் தனது சேனலில் தெரிவித்துள்ளார்.. மேலும் விடாமுயற்சி படத்திலிருந்து இறுதியாக வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீஸ் என குறிப்பிடப்படவில்லை.
இது டிசைனர் விட்டப் பிழையா? அல்லது விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட குழப்பமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் அந்தணன்.
இதேவேளை அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு மே தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Listen News!