• Dec 28 2024

விளம்பர பைத்தியமா விஜய்..? MGR மாதிரி மாஸ் ஹீரோ கிடையாது! பிரபலம் கொடுத்த பேட்டி

Aathira / 16 hours ago

Advertisement

Listen News!

சினிமா துறையில்  பிரபல நடிகராக  தளபதி விஜய் காணப்படுகின்றார். இவர் தான் நடிக்கும் படங்களுக்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகராகவும் திகழ்கின்றார். அதே நேரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சித் தலைவராகவும் காணப்படுகின்றார்.

அரசியல் ரீதியாகவும் சினிமா ரீதியாகவும் விஜய் பிரபலமாக காணப்பட்டாலும் சமீப காலமாகவே சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.  அதன்படி கீர்த்தி சுரேஷ், த்ரிஷா என இருவருடனும் பல கிசுகிசு தகவல்களும் வெளியானது.

அதிலும் சமீபத்தில் கீர்த்தி சுரேஷின் திருமணத்தின் போது நடிகர் விஜய் திரிஷாவுடன் தனியாக காரில் சென்றதும், கீர்த்தியின் திருமணத்தின்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படமும் இணையதளத்தில் பேசு பொருளாக காணப்பட்டது.

d_i_a

இந்த நிலையில், நடிகர் விஜய்  விளம்பர பைத்தியம் என்றும் ஒருபோதும் அவர் எம்ஜிஆர் ஆக முடியாது என்றும் பிரபலம் ஒருவர் கொடுத்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அதன்படி அவர் கூறுகையில், நடிகர் விஜய்யின் வீட்டுக்கு சென்றால் அங்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட இருக்காது. சமீபத்தில் இரண்டு பெண்கள் விஜய் காசு தருவார் என்று சென்றிருந்தார்கள் ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

விஜய் ஒன்றும் எம்ஜிஆர் கிடையாது. விஜய் வீட்டின் கதவு எப்போதுமே பூட்டித்தான் இருக்கும். அவர் வெளியிலேயே வரமாட்டார். 

ஆனால் எம்ஜிஆர் சுமார் 150 பேருக்கு தினமும் சாப்பாடு கொடுப்பார். யார் வந்தாலும் சாப்பிட்டுப் போகும் படி தான் சொல்லுவார். அவருடைய இடத்திற்கு ஒருபோதும் விஜய் வர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement