• Jul 14 2025

விஜய் தேவரகொண்டா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு!

Mathumitha / 3 weeks ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா மீது தற்போது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் சினிமா மற்றும் சமூக வட்டாரங்களில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.


பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து பேசிய அவர் அந்த தாக்குதலை 500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பழங்குடிப் போர்களுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்து பலரின் கடும் விமர்சனத்தை சந்திக்க நேர்ந்துள்ளது.


இதுகுறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ மற்றும் பேட்டிகளின் அடிப்படையில் நடிகரின் மூலம் எஸ்.சி., எஸ்.டி. சமூகங்களை இழிவாக பேசப்பட்டதாக கூறி சில சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, விஜய் தேவரகொண்டாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் நடிகர் இதற்குப் பதிலளிக்கவுள்ளாரா என்பது ரசிகர்கள் மற்றும் சமூக வட்டாரங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

Advertisement