பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசன் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதில் யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் திவாகர், கலையரசன், அரோரா சின்க்ளர் ஆகியோர் உள்நுழைந்து இருந்தனர்.
இந்த நிலையில், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் உள்ளே உள்ள ஹவுஸ்மேட்ஸ் உடன் தனது வாய் வரிசையை காட்டியுள்ளார். இதனால் கேமி, பிரவீன் அவரை வைத்து செய்துள்ளனர்.
அதாவது, பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த ஹவுஸ்மேட்ஸ் அவர்கிட்ட சில விஷயங்களை கேட்டுள்ளார்கள். குறிப்பாக டாக்டரா நீங்க? என்று கேட்டுள்ளார்கள். அதற்கு ஆமாங்க, நான் டாக்டர் தான். அப்படி என்று திவாகர் சொல்லியுள்ளார்.
மேலும் பிசியோதெரபி என்பதனால் அவர்களை டாக்டர் என்று சொல்லக்கூடாது. அப்படிங்கற மாதிரி சொல்லப்பட்டிருந்தது. அதுக்கப்புறம் நிறைய போராட்டங்கள்.. அதன்பின் அவங்களும் ஒரு டாக்டர் தான் என்ற மாதிரி ஒரு அதிகாரமும் பெற்று இருந்தாங்க... அதெல்லாம் உங்களுக்கு சொன்னா புரியாது.. சொன்னாலும் தெரியாது.. என திவாகர் சொல்லியுள்ளார்.
இதைக் கேட்ட கேமி, அத கூகுள் பண்ணி கூட பார்க்கலாம்.. படிச்சா தெரிஞ்சிர போகுது என்று சொல்ல, அதுக்கு படிச்சா தெரியாது, புரியாது என மீண்டும் சொல்லுகிறார் திவாகர்.
அந்த நேரத்தில் படிச்சா தெரியாது, புரியாது அப்படிங்கற மாதிரி எல்லாம் வந்து சொல்லாதீங்க.. படிச்சா தெரியும்.. படிச்சா புரியும்.. அதை நீங்க முதல் அண்டர்ஸ்டாண்ட் பண்ணிக்கோங்க.. என்று பிரவீன் சொல்லுகிறார். அவர் அந்த இடத்தில் ரொம்ப போல்டா பேசியுள்ளார்.
Listen News!