சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , மனோஜ் புதிய பிரான்ச் ஒன்றை ஓபன் பண்ணுவதாக கூறுகின்றார். அதில் மகேஸ்வரியின் புருஷனை பார்ட்னராக சேர்த்துள்ளதாக கூறுகின்றார் .
அந்த நேரத்தில் ரோகிணி, நான் தான் அந்த ஐடியா கொடுத்து மகேஸ்வரி புருஷனோடு கதைத்ததாக சொல்லுகின்றார் . அதற்கு விஜயா, நீ ஒன்னும் இல்லாதவ தானே.. இது பண்ண தானே வேண்டும் என்று சொல்லுகின்றார் .
இதன் போது அங்கு வந்த மீனா டென்ஷனாக இருப்பதை பார்த்து முத்து என்ன நடந்தது என்று கேட்கின்றார். அதற்கு தனது வண்டி காணாமல் போய்விட்டதாக சொல்லுகின்றார் . அதன் பின்பு முத்து அவரை சமாதானம் செய்கின்றார்.
இதை தொடர்ந்து மீனாவின் அம்மாவின் பூக்கடையை தூக்கியவரிடம் செல்வம் லஞ்சம் கொடுத்து பேசுகின்றார். இதனை முத்து உரிய அதிகாரியுடன் நின்று பார்க்கின்றார். அதன் பின்பு அவரை கையும் களவுமாக பிடிக்கின்றனர் .
இதனால் உண்மையை நிரூபித்த முத்துவை அவர் பாராட்டுகின்றார். மேலும் ஒரு லெட்டர் எழுதி தாங்க உடனடியாகவே பூக்கடையை அந்த இடத்திலேயே வைக்க விடுவோம் என்று கூறுகின்றார். அதற்காக அவர் அந்த அதிகாரியின் வீட்டுக்கு செல்கின்றார் .
இதன் போது அங்கே அருணும் வந்து சீதாவின் அம்மா கடையை மீட்டெடுக்க இன்ஸ்பெக்டருடன் கதைத்து சிபாரிசு பண்ணி லெட்டர் கொடுக்கின்றார். ஆனால் அவர் தனக்கு சிபாரிசு பிடிக்காது என்று சொல்லுகின்றார் .
இதை எல்லாம் உள்ளே இருந்து பார்த்துக் கொண்டிருந்த முத்து, அவர் என்னுடைய மச்சான் தான்.. ஆனால் சின்ன மனஸ்தாபம்.. இந்தப் பூக்கடை அவரின் முயற்சியால் வந்ததாகவே இருக்கட்டும் என்று சொல்லுகின்றார் . அதன் பின்பு மீனா அம்மாவுடன் கோயிலுக்குச் செல்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!