• Mar 14 2025

விஷால் காதலுக்கு அன்ஷிதா சம்மதமா ..? இன்ஸ்டா பதிவு சந்தேகத்தை தீர்க்குமா..?

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

பிக்போஸ் வீட்டில் இந்த சீசனில் அதிகமாக மலர்ந்த காதல் கதை ஒன்று தர்ஷிகாவிற்கு விஷால் மேல் காதல் இன்னொன்று விஷாலிற்கு அன்ஷிதா மீது காதல் மிகவும் வெளிப்படையாக இவை அனைத்தும் நடந்து முடிந்திருந்தாலும் வெளியில் தனது காதலை ஒத்துக்கொண்டிருந்தாலும் விஷால் ,அன்ஷிதா சம்மதிக்கவேயில்லை என்றே சொல்லலாம்.


இருப்பினும் வெளியில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளிற்கும் ஜோடி போட்டு திரியும் இவர்கள் தமது காதலை மறைக்கிறார்களோ என்ற சந்தேகத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இருவரும் சமீபத்தில் நடைபெற்ற நேர்காணலில் கூட இருவரும் நல்ல நண்பர்கள் என்றே சொல்லி வருகின்றனர்.


இந்நிலையில் தற்போது ஆன்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரது போஸ்ட்டினை திருப்பி பதிவு செய்துள்ளார். குறித்த போஸ்ட்டில் விஷால் அன்ஷிதாவுடன் இருப்பது போன்று காணப்படுகின்றது.இதனை பார்த்த பலரும் இருவருக்கும் இடையில் காதல் இருக்குமோ என சந்தேக கேள்விகளினை எழுப்பி வருகின்றனர்.


Advertisement

Advertisement