• Jul 01 2024

நடந்தது நடந்து போச்சு.. இத்தோட முடிச்சிக்குவோம்: ‘கல்கி’ படத்தை கலாய்த்த புளூசட்டை மாறன்..!

Sivalingam / 2 days ago

Advertisement

Listen News!

பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் ஒரே நாளில் சுமார் 200 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இந்த படத்திற்கு பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் ஒரு சிலர் நெகட்டிவ் வசனத்தையும் தந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கமல், ரஜினி, அஜித், விஜய் என யாருடைய படமாக இருந்தாலும் நெகட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கும் புளூசட்டை மாறன் வழக்கம் போல் இந்த படத்திற்கும் நெகட்டிவ் வசனங்களை கண்டு கொண்டிருக்கிறார்.

புராணத்தில் உள்ள நான்கு கேரக்டர்களை எடுத்துக்கொண்டு ஒரு கற்பனை உலகத்தை அமைத்து அந்த கற்பனை உலகத்திற்குள் ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் படம் எடுக்காமல், ஒரு பெரிய தயாரிப்பாளர் சிக்கிவிட்டார், அவருடைய பணத்தை கறப்பதற்காகவே ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த படத்தை எடுத்துள்ளார் என புளூசட்டை  மாறன் இந்த படத்தின் விமர்சனத்தை தொடங்கியுள்ளார்.



இன்றைய காலத்திலிருந்து 800 வருடங்களுக்கு பிந்தைய காலகட்டத்தை காட்டும் போது அந்த காலகட்டத்திற்குள் ரசிகர்களால் உள்ளே போக முடியவில்லை, பல ஆங்கில படங்களை பார்த்த ஞாபகம் தான் வருகிறது. 2898 ஆம் ஆண்டு கால கட்டத்தை நம்ப வைப்பதற்கு எந்த முயற்சியும் இயக்குனர் செய்யவில்லை.

இந்த படத்தைப் பொருத்தவரை பிரபாஸ் தான் ஹீரோ என்று யாரும் நினைத்து செல்ல வேண்டாம், அமிதாப் பச்சன் ஹீரோ என்று நினைத்து படம் பாருங்கள், அவரை பாலோ செய்தால் தான் ஓரளவுக்கு இந்த படம் புரியும்.

ஒரு படத்தில் வில்லன் கேரக்டர் மிகவும் வலுவாக இருக்க வேண்டும், ஆனால் இந்த படத்தில் வில்லன் ஒரு வயசான தாத்தாவாக இருக்கிறார், சரி ஹீரோ - வில்லன் சந்திப்பார்கள் என்று பார்த்தால் கடைசி வரை சந்திக்கவே இல்லை.

ஹீரோ இந்த படத்தில் என்ன செய்கிறார் என்றே தெரியவில்லை, வில்லனுக்கு இந்த படத்தில் வேலையே இல்லை, இதை கேள்வி கேட்டால் இரண்டாம் பாகத்தில் பார்த்துக் கொள்வோம் என்று சொல்வார்கள், இதைத்தான் நாங்கள் சொல்கிறோம், நடந்தது நடந்து போச்சு, முதல் பாகத்தோடு தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள், உங்கள் பொங்கல் சோறும் வேண்டாம், இரண்டாம் பாகமும் வேண்டாம், இரண்டாவது பாகத்தை தயவு செய்து எடுக்காதீர்கள்’ என்று புளூசட்டை மாறன் இந்த விமர்சனத்தை முடித்துள்ளார்.

Advertisement

Advertisement