• Apr 02 2025

பிரபல மலையாள நடிகரை காலால் எட்டி உதைத்த பாஜக தலைவர் அண்ணாமலை.. அதிர்ச்சி வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழக பாஜக கட்சி தலைவரான அண்ணாமலை நடித்துள்ள அரபி படத்தின் டெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் இடையில் தொடர்பு உண்டு. தமிழ் சினிமாவில் நடித்து மக்களிடையே நன்கு பிரபலமானவர்கள் பிற்காலத்தில் அரசியலிலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் கலை சார்ந்த அண்ணாதுரை, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த், சரத்குமார், மன்சூர் அலிகான், சீமான், கமலஹாசன், தற்போது விஜய் என அடுத்தடுத்து பல பிரபலங்களும் அரசியலில் களமிறங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில்,  தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் சினிமா துறையில் நடித்துள்ளார்.


அதன்படி கன்னடத்தில் ஸ்ரீ விஜய ராகவேந்திரா புரொடக்ஷன் தயாரிப்பில் சேத்தன் சி.எஸ் தயாரிப்பு உருவான படம் தான் அரபி. இப்படத்தை ராஜ்குமார் என்பவர் இயற்றியுள்ளார்.


சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு ஊனம் ஒரு தடையாக இருக்காது என்பதை நிரூபித்து தேசிய அளவில் பெயரெடுத்த விஸ்வாஷ் என்ற இளைஞனின் உண்மை கதையை தான் படமாக எடுத்துள்ளார்கள்.

இளம் வயதில் தன் பெற்றோரை மட்டும் இல்லாமல், தன் இரு கைகளையும்  இழந்த விஸ்வாஷ் வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் வெற்றி பெறுகிறார். இந்த படத்தில் ஹீரோவை உற்சாகப்படுத்தும் நீச்சல் பயிற்சியாளராக  அண்ணாமலை நடித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அண்ணாமலை நடித்துள்ள படம் தமிழிலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Advertisement

Advertisement