• Jan 19 2025

நடிகர் அப்பாஸ் மகள் செம்ம க்யூட்.. ஹீரோயினா வந்தா ஒரு கலக்கு கலக்குவாங்க..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் அப்பாஸ் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அவரது மகளைப் பார்த்து நெட்டிசன்கள் செம க்யூட்டாக இருப்பதாகவும் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வந்தால் ஒரு கலக்கு கலக்குவார் என்றும் கமெண்ட் பதிவாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். கடந்த 1996 ஆம் ஆண்டு ’காதல் தேசம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆகி அதன் பிறகு ’விஐபி’ ’பூச்சூடவா’ ’ராஜா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார் என்பதும் அவர் நடித்த சில படங்கள் வெற்றி பெற்ற போதிலும் அடுத்தடுத்து அவர் கதைகளில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் வரிசையாக தோல்வி படங்கள் கொடுத்ததால் ஒரு கட்டத்தில் திரை உலகில் இருந்து காணாமல் போனார்.

அதன் பிறகு அவர் வெளிநாட்டில் மாத சம்பளத்திற்கு வேலை பார்த்து வருவதாக கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் அவர் சென்னை வந்திருந்தார் என்பதும் சில பேட்டிகள் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் அப்பாஸ் கடந்த 1997 ஆம் ஆண்டு எரும்அலி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்து பெரியவர்களாகி உள்ள நிலையில் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

குறிப்பாக அப்பாஸ் மகள் ஹீரோயின் மெட்டீரியல் என்றும் அவர் மட்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தால் ஒரு கலக்கு கலக்குவார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வருகிறது.

Advertisement

Advertisement