• Jan 19 2025

பிக் பாஸுக்கே தண்ணி காட்டிய மாயா! புது சிக்கலால் அடக்கி வாசிக்கிறாரா? லீக்கான ஆதாரம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்கில் அவர்கள் தோற்றால் 3 வைல்ட் கார்ட் என்ட்ரி உள்ளே வருவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதை நினைவில் வைத்தே, தற்போது உள்ள போட்டியாளர்கள் தீயாய் விளையாடி வருகின்றனர்.

எனினும், பிக் பாஸ் வீட்டிலிருந்து ரெட் கார்ட் கொடுத்து அனுப்பப்பட்ட பிரதீப் மீண்டும் உள்ளே வர வேண்டும் என மக்கள் எதிர் பார்த்தாலும் அதற்கு சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் டீம் கூட இடம் கொடுப்பதாக தெரியவில்லை.

மேலும், பிரதீப்க்கு ரெட் கார்டு கொடுத்தது மிகப்பெரிய தவறு, பொய் காரணங்கள் சொல்லப்பட்டதால் தான் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது எனவும், இதற்கு யார் பொறுப்பு என்பதையும் யாரும் சொல்ல மறுக்கிறார்கள் என்றும் பேசப்பட்டு வருகிறது.


இந்த நிலையில்,பிரதீப்புக்கு எதிராக மாயா செய்த சூழ்ச்சி வெளிவந்து இருக்கிறது. அதாவது பிக் பாசின் ஏனைய  சீசன்களில் மக்கள் ஒரு போட்டியாளரை ஆதரிப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மாதமாவது ஆகும். ஆனால் பிரதீப் ஒரு வாரத்திலேயே மக்கள் மனதில் நிலைத்து விட்டார். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடுகளில் ஆடியன்ஸ்கள் அவருக்கு கை தட்டியதே அதற்கு சாட்சி.

இவ்வாறு ரசிகர்களின் மனக்கணக்கை சரியாக புரிந்து கொண்ட மாயா முதலில் பிரதீப்பிடம் நன்றாக பேசுவது போல் காட்டிக்கொண்டார். கூல் சுரேஷ் சம்பந்தப்பட்ட விஷயம் வெளியான போது மாயா இதுதான் சரியான சமயம் என்பதை தீர்மானித்து, அவர் பேச்சைக் கேட்டு ஆடிய அத்தனை தலையாட்டி பொம்மைகளையும் பிரதீப்புக்கு எதிராக மாற்றிவிட்டார்.


அதனால்தான் மாயா கடந்த இரண்டு வாரங்களாக ரொம்பவே அடக்கி வாசிக்கிறார். வெளியே போனால் பிரதீப்பின் ரசிகர்களுக்கு என்ன பதில் சொல்வோம் என்று மாயா புலம்பிய வீடியோ தான் அவர் தீட்டிய சதி திட்டத்திற்கான ஆதாரம். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் கமல் மாயாவை கேள்வி கேட்காமல் இருப்பது அவருடைய சதியில் இவருக்கு உடந்தை இருப்பது போல் தான் காட்டுகிறது.

இதேவேளை, தற்போது மாயா, பூர்ணிமா இருவரும் சேர்ந்து செய்யும் அட்டகாசங்களையும் நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement