• Jan 19 2025

மெழுகு டாலு.. போல இருக்கும் பிக்பாஸ் வினுஷா..! மிரளவைக்கும் போட்டோ ஷூட்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் ஆறாவது போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில்நுழைந்தவர் தான் வினுஷா. இவர் பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் ரசிகர்களிடையே  பிரபலமானவர்.

பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வினுஷா தன்னுடைய நிறத்திற்காக தான் சிறிய வயதில் இருந்து பல சவால்களை எதிர்கொண்டதாக தன்னைப் பற்றிய அறிமுக வீடியோவில் கூறினார். அதனைத் தொடர்ந்து   பேசிய கமல்ஹாசன் மனிதர்களுக்கு உள்ளே இருக்கும் பிரகாசம் தான் முக்கியம். பூலோகத்தில் இருக்கும் பெரும்பான்மையான மனிதர்களின் நிறம் கருப்புதான்  என்று கூறினார்.


எனினும், பிக் பாஸ் வீட்டில் விளையாடி வந்த வினுஷாவை நிக்சனும் உருவ கேலி செய்திருந்தார். இதனை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின் அறிந்த வினுஷா, நிக்சனுக்கு சரியான பதிலடி கொடுத்தார்.

அதுபோலவே பிக் பாஸ் வீட்டிலுள்ள நிக்சனும், நான் வெளியே சென்றால் வினுஷா காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்பேன் என சொல்லி இருந்தார்.

இந்த நிலையில், பாரதி கண்ணம்மா சீரியல் புகழும், பிக் பாஸ் போட்டியாளருமான வினுஷா, தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

குறித்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. அதற்கு லைக்ஸ், கமெண்ட் என ரசிகர்கள் தமது அன்பை பொழிந்து வருகின்றனர்.



Advertisement

Advertisement