• Jan 19 2025

நரிக்குறவ மக்களுக்கு டிக்கெட் எடுத்துக் கொடுத்த பிக் பாஸ் டைட்டில் வின்னர்! ஏன் தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து உள்ளவர் தான் அஜய் ஞானமுத்து. இவர் டிமாண்டி காலனி என்ற திரைப்படத்தின் ஊடாக இயக்குனராக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இதன் வெற்றியை தொடர்ந்து இன்றைய தினம் டிமான்டி காலனி படத்தில் இரண்டாவது பாகம் உலக அளவில் வெளியானது. தற்போது வரையில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த திரைப்படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர், பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.


தமிழ் சினிமாவில் அருள்நிதி அதிகம் கொண்டாடப்படாத நடிகராக காணப்பட்ட போதும், அவர் தெரிவு செய்யும் கதாபாத்திரமும் கதையும் பலம் வாய்ந்ததாகவே காணப்படுகின்றது. இந்த படம் அஜய் ஞானமுத்துவிற்கும் அருள்நிதிக்கும் சிறந்த கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான இந்த படம் தில்லர் நிறைந்த ஹாரர் படமாக காணப்படுகின்றது. இந்த திரைப்படம் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதனால் இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும் என படத்தை பார்த்த ரசிகர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் டிமான்டி காலனி 2 படத்தில் நடித்த பிக் பாஸ் டைட்டில் வின்னரான அர்ச்சனா, தான் நடித்த முதல் படம் என்பதால் நரிக்குறவர் மக்களும் தனது படத்தை பார்க்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இலவசமாக டிக்கெட் எடுத்து கொடுத்துள்ளாராம். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement