• Jan 18 2025

அட அவங்களா இவங்க.. பிக்பாஸ் சீசன் 7 அக்ஷயா உதயகுமார் யார் தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க....

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7ல் பங்குபற்றி உள்ள அக்ஷயா உதயகுமார் யார் என்று தெரியுமா ? அவர் பற்றி தெரியாததை தெரிந்து கொள்வோம் வாங்க


அக்ஷயா உதயகுமார் கேரளாவை சேர்ந்த ஒரு மாடல் மேலும் தென்னிந்திய நடிகை மற்றும் சிறந்த நடனக் கலைஞர். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பணிபுரிகிறார். கேரளாவின் பாலக்காட்டில் மலையாளி பெற்றோருக்குப் பிறந்த இவர், இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் தற்போது வாழ்ந்து வருகிறார்.


அக்ஷயாவுக்கு அபிஷேக் உதயகுமார் என்ற சகோதரர் உள்ளார். அவர் தனது சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக காணப்படுகிறார். தனது இன்ஸ்டாகிராம் ரீல் மூலம் தனது தொழில் பயணத்தைத் தொடங்கிய இவர் 2022 ஆம் ஆண்டில் "என் பதி நீதாநடி" என்ற தமிழ் இசை ஆல்பத்தில் நடித்தார். 


அக்ஷயா தமிழில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் ரவீனா ரவியுடன் "லவ் டுடே" திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் படத்தில் ஸ்வேதாவாக நடித்ததன் மூலம் ரசிகர்களால் கவனமீர்க்கப்பட்டார்.  மேலும் சித்தி, ஹயா  போன்ற மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஆரம்பமான பிக் பாஸ் தமிழ் சீசன் 7 இன் போட்டியாளர்களில் ஒருவராக பங்குபற்றியுள்ளார்.



Advertisement

Advertisement