சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், க்ரிஷை தத்தெடுப்பதற்காக விஜயாவும் சந்தோஷும் வந்த நிலையில் எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள், மேலும் அதற்கு விஜயா தான் ஐடியா கொடுத்தார் என்றும் தெரிய வருகின்றது.
எனினும் க்ரிஷ் இந்த வீட்டில் இருக்கத்தான் எனக்கு விருப்பம் என்று சொன்னதும் அவர்கள் அங்கிருந்து சென்று விடுகின்றனர். அதற்குப் பிறகு முத்து மீனாவை ஒரு இடத்திற்கு வருமாறு அழைக்கின்றார். ஆனாலும் மீனா எங்கு என்று கேட்க, அது சர்ப்ரைஸ் என கூட்டிச் செல்கின்றார்.
அதன்படி மீனாவை குழந்தைகள் தத்தெடுக்கும் நிலையத்திற்கு கூட்டிச்சென்று அங்கு க்ரிஷை சட்டபூர்வமாக தத்தெடுப்பதற்கு பேசுகின்றார். இதை பார்த்த மீனா தனக்கு இதில் விருப்பமில்லை, க்ரிஷை நாங்கள் தத்தெடுக்க முடியாது என்று கூறுகின்றார்.

அதற்கான காரணத்தை முத்து கோபமாக கேட்ட போதும், அதற்கு காரணம் இருக்கு. நான் நேரம் வரும்போது சொல்லுகின்றேன் என்று சொல்லுகின்றார் மீனா. இதனால் முத்து கடும் டென்ஷன் ஆகின்றார்.
இறுதியாக மனோஜ் தன்னுடைய ஆபிஸில் வேலை பார்த்த ஜீவாவிடம் சொல்லி க்ரிஷை வேறு இடத்திற்கு அனுப்பி வைப்பதற்கு திட்டம் போடுகிறார். இந்த உண்மை தெரிந்து ரோகிணி அதிர்ச்சி அடைகின்றார், இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!