திரைப்பட உலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிய நடிகை நிவேதா பெத்துராஜ், தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றி உருவாகியுள்ள குழப்பங்களால் ரசிகர்களையும் மீடியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அவரது திருமணம் திடீரென நிறுத்தப்பட்டதா? அல்லது இது வெறும் வதந்தியா? என்பதில் உறுதி இல்லை. ஆனால் சமூக வலைத்தளத்தில் நிவேதாவின் திருமணம் ரத்து செய்யப்பட்டு விட்டது எனவும் இதனாலேயே அவர் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடக கணக்குகளில் இருந்து டெலிட் செய்ததாகவும் தகவல்கள் பரவி ரசிகர்களிடையே பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘ஒருநாள் கூத்து’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், தனது இயல்பான நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். பின்னர் ‘சங்கத் தமிழன்’, ‘டிக் டிக் டிக்’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார்.
நடிகையாக மட்டுமல்லாமல், கார் ரேஸர், மாடல் போன்ற பல அடையாளங்களுடன் பன்முக திறமை கொண்டவராகவும் திகழுகிறார்.

தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும், ரசிகர்கள் வட்டாரத்தில் நிவேதா தனி இடம் பெற்றவர்.
இந்நிலையில், 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், தனது காதலர் ரஜித் இப்ரான் உடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதை நிவேதா சமூக வலைத்தளத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியானதும் ரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர்.
அத்துடன், இந்த வருட இறுதிக்குள் திருமணம் எனவும் தகவல்கள் வெளியானது. ஆனால், திடீரென நிவேதா தனது சமூக வலைத்தள கணக்குகளில் இருந்து ரஜித் இப்ரானுடன் இருக்கும் புகைப்படங்கள் எல்லாவற்றையும் நீக்கியது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் திருமணம் ரத்தாகிவிட்டதா.? எனப் பல கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ளன. அத்துடன், இது வதந்தியாக இருக்கலாம் எனவும் சிலர் கருதுகின்றனர்.
Listen News!