தமிழ்த் திரையுலகில் ரசிகர்களுக்கான முக்கியமான செய்தி ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது. பொன்ராம் இயக்கத்தில் உருவாகிய ‘கொம்பு சீவி’ திரைப்படம், டிசம்பர் 25-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்பொழுது புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

அதாவது, ஒரு வாரம் முன்னதாகவே டிசம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் சரத்குமார் மற்றும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அத்துடன் இப்படத்தினை பிரபலமான இயக்குநர் பொன்ராம் இயக்குகின்றார். இவர், தனது தனித்துவமான திரைக்கதை மற்றும் காமெடி உணர்வுக்கு பெயர் பெற்றவர். ‘கொம்பு சீவி’ படத்தில் அவர் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை அளிக்க உள்ளார்.
Listen News!