சென்னையில் ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் என்ற நிகழ்வை நேற்றைய தினம் நடத்தியது. இதன்போது பல இளம் திறமையாளர்களை ஊக்குவிப்பதற்காக சுமார் 12000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் அந்த நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அதில் 4000 கோடியை தமிழகத்தில் முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.
ஜியோ ஹாட்ஸ்டார் வழங்கிய நிகழ்வில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் காணப்படும் பிக் பாஸ் தொகுப்பாளர்களும் ஒன்றாக மேடைக்கு வந்தனர்.
இதன்போது தாதா சகாப்தே பால்கே விருது பெற்ற மோகன்லாலுக்கு நாகர்ஜுனாவும் விஜய் சேதுபதியும் சால்வை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
இந்த நிலையில், குறித்த மேடையில் விஜய் சேதுபதி பேசும்போது, என்னை நினைத்து நான் உண்மையாகவே பெருமைப்படுகிறேன். இவ்வளவு பெரிய மனிதர்களுடன் நானும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். நான் மோகன்லாலின் மிகப்பெரிய ரசிகன். அவருடைய ஆட்டோகிராப் வாங்கி என்னுடைய வீட்டில் பிரேம் போட்டு வைத்திருக்கின்றேன்.

நாகார்ஜுனா சார் ஒரு ஜென்டில்மேன். அவருக்கு வயதாகவே இல்லை. அவரிடம் கூலான எனர்ஜி எப்போதும் இருக்கும். சின்ன வயசிலிருந்து அவரை பார்க்கின்றேன். நான் வளர்ந்து விட்டேன்.. ஆனால் அவர் இன்னும் அதே போல தான் இருக்கின்றார்.
என்னுடைய பேரக் குழந்தைகள் வந்தாலும் நாகார்ஜுனா சார் இப்படியேதான் இருப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதுவுமே டிராமா கிடையாது. பிக் பாஸ் எனக்கு கண்ணாடியை போன்றது. ஒவ்வொரு போட்டியாளிடமும் நான் என்னை பார்க்கின்றேன். நாகார்ஜுனா சார் போலவே நானும் முதலில் பிக் பாஸை தொகுத்து வழங்க மாட்டேன் என்றேன். அது தொடர்பில் எனக்கு முதலில் மாற்று கருத்துக்கள் இருந்தது.
ஆனால் அந்த நிகழ்ச்சி மனிதர்களை படிக்கும் புத்தகத்தை போன்றது. நானும் அங்கிருந்து பல விஷயங்களை கற்று வருகின்றேன். அதில் பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. எனக்கு பதில்களை விட கேள்விகள் தான் ரொம்ப பிடிக்கும். பிக் பாஸ் நிகழ்ச்சி என்னிடம் பல கேள்விகளை எழுப்புகின்றது. நான் அதிலிருந்து பலவற்றைக் கற்றுக்கொள்ளேன் என்று தெரிவித்தார்.
Listen News!