இந்திய சினிமா இன்று மொழித் தடைகளைத் தாண்டி, எல்லைகளை உடைத்து, உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் நிலையில் உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிராந்திய மொழித் திரைப்படங்கள் தேசிய மட்டத்தில் மட்டும் அல்லாது, சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில், நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சி ஒன்றில் முக்கியமான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

அவர் அதன்போது, “கர்நாடகாவின் காந்தாரா ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்தது. மலையாளத்தின் மர்மத் திரைப்படமான Drishyam எல்லைகளைத் தாண்டி மக்களைக் கவர்ந்திருந்தது.
பாகுபலி மற்றும் புஷ்பா போன்ற படங்கள் இன்று ஒரு சொற்களஞ்சியமாகவே மாறிவிட்டன. சிறந்த படைப்புக்கு மொழி எப்போதுமே தடையில்லை.” என்றார்.

கமல் ஹாசனின் இந்த கருத்து தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழித் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கமல் ஹாசன் எடுத்துக்காட்டாக கூறிய படங்கள் கடந்த ஒரு தசாப்தத்தில் இந்திய சினிமா உருவாக்கிய மிகப்பெரிய மாற்றத்தின் சின்னங்களாக திகழ்கின்றன.
Listen News!