சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் நடித்து ரசிகர்களின் நீங்கா இடம் பெற்றவர் ரச்சிதா மகாலட்சுமி. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரச்சிதாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. சமீபத்தில் இவர் Fire என்ற படத்தில் கிளாமராக நடித்தார். இது மிகப்பெரிய விமர்சனங்களை பெற்றது.
இந்த நிலையில், ரச்சிதா மகாலட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள 99/66 என்ற படத்தின் வீடியோ கிளிப்ஸ் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை எம்.எஸ் மூர்த்தி இயக்கி உள்ளார். மேலும் இதில் சிங்கம் புலி, பவன் கிருஷ்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
சென்னையில் 99 வீடுகள் கொண்ட அடுக்கு மாடியில் இந்த படத்தின் கதை நடக்கின்றதாம். அதனால் தான் அந்தப் படத்திற்கு அப்படி ஒரு பெயர் வைத்துள்ளார்கள். இதன்போது அங்கு நடக்கும் அமானுஷ்ய சம்பவங்கள், அதன் பின்னணியில் என்ன நடக்கின்றது? என்பதை கண்டுபிடிக்கும் கதை களத்துடனே இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே அவர்களால் அங்கு நடக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க முடிந்ததா? இல்லையா? என்பதுதான் மீதிக் கதை.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் இலங்கை, பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள புத்த மடயாளங்களில் 500கும் மேற்பட்ட பிக்குகள் மத்தியில் இடம்பெறுள்ளதோடு, அதனை மையமாக கொண்டு பாடல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
Listen News!