தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழும் தனுஷ், சமீபத்தில் இயக்குநர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் உருவான “தேரே இஷ்க் மே” படம் மூலம் திரையரங்கில் அசத்தியுள்ளார்.

இந்த திரைப்படம் வெளிவந்த 11 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.145 கோடி வசூல் செய்து, தனுஷுக்கு திரையுலகில் புதிய உயரத்தை வழங்கியுள்ளது. இதனை திரைத்துறையினர் பெரிதும் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், தனுஷ் தற்பொழுது 54வது திரைப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

இவரது கோயில் தரிசன புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.புகைப்படங்கள் வெளியான சில மணி நேரத்துக்குள் இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!