தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தளபதி விஜயின் இறுதிப் படமான ஜனநாயகன் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த படம் அரசியல் ரீதியாகவும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் ரெக்கார்டிங் பணிகளை பார்த்துக் கொண்டிருப்பதாகவும், இந்த மாதம் இறுதியில் மலேசியாவில் நடைபெற உள்ள ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா தெறியாக இருக்கும் எனவும் அனிருத் தெரிவித்துள்ளார்.
அதன்படி அவர் கூறுகையில், விஜய் சாரோட ஜனநாயகன் படத்தில் ஆர் ஆர் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன். கொஞ்சம் சோகமா இருக்கு, ஏனென்றால் இது விஜய் சாரோட கடைசி படம்.

ஆனால் மலேசியாவில் நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழா கண்டிப்பாக தெறியா இருக்கும். ஓபன் ஸ்டேடியத்தில் ஜனநாயகன் படத்தின் பாடல்கள் மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய கத்தி, மாஸ்டர், லியோ, பீஸ்ட் என அனைத்து படப்பாடல்களையும் ட்ரிப்யூட்டாக பாடப் போகிறேன்.

பொதுவாக மலேசியாவில் நடைபெறும் கான்செப்ட் என்றால் தெறிக்கும். இது தளபதியின் லாஸ்ட் ஆடியோ லான்ச் என்றால் சொல்லவே தேவை இல்லை என தனது சந்தோஷத்தை பகிர்ந்துள்ளார் அனிருத்.
விஜய் நடிக்கும் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் அதன் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றார்கள். இந்த ஆடியோ லான்ச் முடியும் நேரத்தில் ரசிகர்கள் மட்டுமின்றி பிரபலங்களின் கண்ணீரும் கண்டிப்பாக நிரம்பி விடும் என்பதும் உறுதி.
Listen News!