• Dec 12 2025

படையப்பா மறுவெளியீட்டு டிரைலரை பார்த்தீங்களா.? செம்ம மாஸா இருக்கே.!

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

கடந்த 1999 ஆம் ஆண்டு  நடிகர் ரஜினிகாந்த்  நடிப்பில், இயக்குநர் கே. எஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான படையப்பா திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. 

இந்த படத்தில்  சிவாஜி கணேசன், ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், சௌந்தர்யா, லட்சுமி, ரமேஷ் கண்ணா, ராதாரவி, அப்பாஸ் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். 

மேலும் இந்த படத்திற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு  இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அத்துடன் இந்த படத்தில் இடம்பெற்ற காமெடிகளும்  இன்றும்  ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகவே காணப்படுகின்றன .


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு  நாளைய தினம்  படையப்பா திரைப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், படையப்பா திரைப்படத்தின் மறு வெளியீடு டிரைலரை படக் குழுவினர் நேற்று வெளியிட்டுள்ளனர். தற்போது படையப்பா படத்தின் டிரைலர்  ரசிகர்களின் கவனம் எடுத்து வருகின்றது.

Advertisement

Advertisement