சத்யராஜ் மகள், சமூகச் செயற்பாட்டாளர் மற்றும் திமுகவில் இணைந்த புதிய உறுப்பினர் திவ்யா சத்யராஜ் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் தனது அரசியல், சமூக நோக்கங்களை வெளிப்படுத்தியுள்ளார். திவ்யா, திரையுலக புகழில் வளர்ந்தவர் என்றாலும், அவர் அரசியல் குறித்து சிறப்பாக கருத்துகளை முன்வைப்பவர்.

இந்நிலையில் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பின் போது திவ்யா, "திரையில டான்ஸ் ஆடுறவங்க தலைவர் கிடையாது. தரையில் இறங்கி வேலை செய்யுறவங்க தான் தலைவர். அத்துடன் நான் யோகிபாபுவோட பெரிய fan. ஒரு நடிகனாக யோகிபாபுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால், யோகி பாபு சார் ஒரு கட்சி ஆரம்பிச்சால் அவருடைய 'Sweet, Cute' பார்த்து நான் வாக்களிக்க மாட்டேன். அவருடைய மக்கள் பணியைப் பார்த்து தான் நான் வாக்களிப்பேன்" எனக் கூறியுள்ளார்.

இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றன. அத்துடன், திவ்யா தனிப்பட்ட விருப்பங்களையும், அரசியல் நிலைப்பாடுகளையும் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!