90 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பலரது கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை சினேகா. இவர் விரும்புகின்றேன் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதற்குப் பிறகு பல முன்னணி நடிகர்களுடன் நடித்து டாப் நடிகையாக வலம் வந்தார்.
இவருடைய சினிமா கேரியர் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.
எனினும், மீண்டும் சினிமாவில் காலடி வைத்தார் சினேகா. அதன்படி இறுதியாக இவருடைய நடிப்பில் கோட் படம் ரிலீசானது. அந்த படத்தில் சினேகாவின் நடிப்பும் அவருடைய அழகும் வெகுவாக பாராட்டப்பட்டது.

இந்த நிலையில், நடிகை சினேகா தன்னுடைய சினேகாலயா நிறுவனத்தில் மகாராணி போல் ஆடை அணிந்து பலரையும் அழகில் பிரமிக்க வைத்துள்ளார். இதன்போது அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியும், அதற்கு பிரசன்னா கொடுத்த ரியாக்ஷனும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதன்படி அதில் சினேகா, தன்னுடைய சினேகாலயத்தில் எல்லோரும் மகாராணியாகவே ஆடை அணிய வேண்டும். அதிலும் மணப் பெண்களுக்கு ஏற்ற இடம் இதுதான் என்று தெரிவித்தார்.
இதன்போது செய்தியாளர், உங்களுக்கு வயசு ஆகாதா எப்போதும் இளமையாகவே இருக்கின்றீர்கள் என்று கேட்க, உடனே பிரசன்னா நாக்கை கடித்துக் கொண்டு ரியாக்சன் ஒன்றை கொடுத்தார்.. ஆனாலும் சினேகா அதற்கு தன்னுடைய கணவரின் சப்போர்ட்டும் ரொம்ப இருக்கிறபடியா தான் இப்படி இருக்க முடியுது என்று ரொம்ப கூலாக பதில் அளித்துள்ளார்.
Listen News!