எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஜனனியின் பிசினஸுக்கு லைசன்ஸ் வாங்கி கொடுத்த நபர் ஐம்பதாயிரம் பணம் கேட்க, தன்னிடம் காசு இல்லை என கூறுகின்றார் ஜனனி.
அதற்கு இவ்வளவு பெரிய வீடு இருக்கு பிசினஸ் ஆரம்பிக்கிறீங்க, உங்கள்ட்ட காசு இல்லன்னு சொல்றீங்க என்று கேட்க, எங்களிடமிருந்து எல்லா பணத்தையும் முதலீடு செய்துவிட்டோம். எங்களிடம் இப்போது பணம் இல்லை என்று சொல்லுகின்றார்கள்.
இதை கேட்டுக் கொண்டிருந்த விசாலாட்சி, ஜனனி, நந்தினி, ரேணுகாவை உள்ளே அழைத்து ஒரு மஞ்ச பையை கொடுக்கின்றார். அதில் 70 ஆயிரம் பணம் இருக்கு. அதை அவனிடம் கொடுக்குமாறு கொடுக்கின்றார்.

எனினும் குணசேகரன் பணமாக இருக்குமோ என்று பயத்தில் ஜனனி வாங்காமல் நிற்க, இது அவனோட பணம் இல்லை நான் சின்ன வயசிலிருந்து சேர்த்த காசு. எங்க செல்லாம போயிடுமோ என்று அப்பப்போ மாற்றி வைத்திருப்பேன் என்று சொல்ல, பணத்தை வாங்குகின்றார் ஜனனி.
இன்னொரு பக்கம் குணசேகரன் தலைமறைவாக இருக்கும் இடம் கொற்றவைக்கு தெரிய வருகிறது. இதனால் அவர்களை கைது செய்ய வருகின்றார்கள். அதற்கு முன்பு இந்த விஷயத்தை வக்கீல் குணசேகரனுக்கு சொல்ல, அவர் அங்கிருந்து எஸ்கேப் ஆகின்றார்.
இப்படி போலீசுக்கு பயந்து தலைமறைவாக ஓடுவதால் டென்ஷன் ஆன குணசேகரன், நான் வீட்டைக் கட்டினால் இவளுக பாயவிருச்சி படுப்பார்களா... அவளுங்களை வெட்டி எறிய போகிறேன் என்று ஆவேசமாக கூறுகின்றார். இதை அடுத்து என்ன? நடந்தது போலீஸ் குணசேகரனை கைது செய்கின்றார்களா? என்பதை இனிவரும் எபிசோட்டில் பார்க்கலாம்,
Listen News!