இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் - நடிகர் அஜித்குமார் கூட்டணியில் உருவாக உள்ள புதிய திரைப்படத்திற்கு AK 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டது. இந்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அஜித் தற்போது கார் பந்தய ரேஸ்களில் தனது கவனத்தை செலுத்தி வருவதால், அவை அனைத்தும் முடிவடைந்த பின் AK 64 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு ஆரம்பிக்கப்படும் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு AK 64 படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இது அஜித் குமார் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்துள்ளது.

தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் குமார் தனது அணியுடன் பங்கேற்று வருகின்றார். சமீபத்தில் அவரை சந்திப்பதற்காக சிலம்பரசன் நேரில் சென்று இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
அதே நேரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் தனித்தனியாக நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்திருந்தார் அஜித். இந்த செயல் பலராலும் பாராட்டப்பட்டது.
Listen News!