• Sep 13 2024

எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரனாக நடிக்கவுள்ள நடிகர் வேல ராமமூர்த்தி யார் தெரியுமா?- எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து அண்மையில் மாரடைப்பு காரணமாக திடீரென இறப்புக்குள்ளானார். இதனால் அடுத்து யார் குணசேகரனாக நடிப்பார் என்ற பேச்சுவார்த்தை பல நடிகர்களிடமும் நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

அந்த வகையில் பிரபல நடிகரான வேல ராமமூர்த்தியிடமும் இது குறித்து பேசப்பட்டதாகவும் அவர் சீரியலில் நடிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். எனவே தற்பொழுது இவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க,


நடிகரும் எழுத்தாளருமாகிய வேல ராமமூர்த்தியின் வயது 71 வயதிலும் தன்னுடைய உடலைக் கட்டுக்கோப்பாக வைத்து வருகின்றார். கிராமத்தவரான இவர் தன்னுடைய 17 வயது வரை கிராமத்தில் இருந்து வளர்ந்துள்ளார்.இவர் காய்கறி முதல் இறைச்சி வகைகளையும் அதிகம் விரும்பிச் சாப்பிடுவாராம்.தன் மண்மீதும் மக்கள் மீதும் கொண்ட விருப்பத்தின் காரணமாகத் தான் எழுத்தாளராக உருவெடுத்தாராம்.

மேலும் சின்ன வயசில தன்னுடைய நண்பரின் உதவியுடன் சென்னைக்கு வந்தாராம். ஆனால் சென்னையில் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த இவர் தனது நண்பருடன் சேர்ந்து இராணுவத்தில் சேர்ந்தாராம். அதன் பின்னர் தான் எழுத்தாளராக மாறினாராம் அதன்படி தன்னுடைய ஊரில் நடந்த மரக்கடத்தல் தொடர்பாகத் தான் அன்னுடைய முதல் கதையை எழுதினாராம்.


இது ரசிகர்களைக் கவர்ந்ததால் தொடர்ந்து பல உண்மைச் சம்பவங்களை கதைகளாக எழுத ஆரம்பித்தாராம். இவர் எழுதிய நுால்களில் குற்றப்பரம்பரை நாவல் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றதாம்.இது தவிர இவர் வீதிகளில் நடனம் ஆடும் கலைஞராகவும் இருந்திருக்கின்றாராம்.நடிப்பை தன்னுடைய எழுத்தின் மூலம் தான் கற்றுக் கொண்டாராம்.

மேலும் இவர் மதயானைக் கூட்டம் திரைப்படத்தில் தான் அறிமுகமாகினாராம். தொடர்ந்து சேதுபதி,கிடாரி,எங்க வீட்டுப்பிள்ளை எனப் பல படங்களில் நடித்திருக்கின்றாராம். இவருடைய கம்பீரத்தன்னையை பார்த்து மிரண்டு போன பல பிரபலங்களும் இருக்கின்றார்களாம்.மேலும் இவருக்கு யாராவது தப்பு பண்ணினால் கோவம் வருமாம்.மற்றும்படி மிகவும் மென்மையான மனிதராம். இவருடைய ஊரில் என்ன பிரச்சினை நடந்தாலும் இவர் தான் தீர்த்து வைப்பாராம். இதனால் இவருடைய வீட்டை காவல் கார வீடு என்று அழைப்பார்களாம்.


மேலும் நடிகராக இருந்தாலும் இவருக்கு எழுத்து மேல தான் அதிக ஆர்வம் உள்ளது என்று இவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். அத்தோடு இவர் எதிர் நீச்சல் சீரியலில் நடிக்க வருவாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement