• Jan 26 2026

அட்ராசக்க! 11 நாட்களில் 145 கோடி கிளப்பில் சாதனை படைத்த Tere Ishk Mein! குஷியில் படக்குழு

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

நவம்பர் 28, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியான Tere Ishk Mein, 11 நாட்களில் ரூ.145.38 கோடி வசூல் செய்து, இந்த ஆண்டின் முக்கியமான பாலிவுட் ஹிட்களில் ஒன்றாக திகழ்கிறது. ஆனந்த் எல். ராய் – தனுஷ் கூட்டணியில் வெளிவந்த முந்தைய படங்களான "ராஞ்சனா" மற்றும் "அட்ராங்கி ரே" போன்ற படங்களுக்கு இணையாக, இந்த படமும் ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.


இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக கிரித்தி சனோன் நடித்துள்ளார். இருவரின் கெமிஸ்ட்ரி, கதையின் உணர்ச்சி, இசை என்பன ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. 

வெளியான முதல் நாளே விமர்சகர்களிடையே வேறுபட்ட கருத்துகள் எழுந்தன. சிலர் தனுஷின் நடிப்பு படம் முழுவதையும் தாங்கி நிற்கிறது என்று பாராட்ட, சிலர் நெகட்டிவாகவும் தமது கருத்துகளைத் தெரிவித்தனர். 


இந்நிலையில், 11 நாட்களில் ரூ.145.38 கோடி வசூல் செய்திருப்பது, தனுஷின் பாலிவுட் மார்க்கெட் மீண்டும் வலுவாக வளர்ந்து வருவதை காட்டும் முக்கிய சின்னமாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement