• Dec 12 2025

சிங்கம் களத்தில இறங்கிடுச்சு போலயே... வெற்றிமாறன் பகிர்ந்த "அரசன்" பட புதிய அப்டேட்.!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வித்தியாசமான இயக்குநர்களில் ஒருவராகப் பெயர் பெற்ற வெற்றிமாறனின் அடுத்த படமான ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பை இன்று மதுரையில் தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


‘அரசன்’ படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்து வருகின்றார். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகிய அவர், பெருமளவிலான படங்களை வெற்றிகரமாக உருவாக்கிய அனுபவம் கொண்டவர். 

அத்துடன் நடிகர் சிம்பு, தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களை கைப்பற்றியவர். இந்நிலையில், ‘அரசன்’ படத்தில் அவர் நடிக்கவுள்ள வேடம் ரசிகர்களுக்கு மிகுந்த அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகின்றார். அவரது இசை, ஏற்கனவே தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கவரும் வகையில் காணப்படும். 

இந்த படத்தின் கதை வடசென்னை படத்தின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளதால், படம் சமூக மற்றும் அரசியல் பின்னணியில் நடந்த நிகழ்வுகளை வெளிப்படுத்தும் ஒரு த்ரில்லர் அனுபவமாக இருக்கும் என ரசிகர்கள் ஊகிக்கின்றனர். 

Advertisement

Advertisement