• Dec 12 2025

நான் பொண்ணு கிடைக்காம காத்திருக்கல..! சினேகனின் அதிரடி பேட்டி

Aathira / 21 hours ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் தனித்துவமான கவி வரிகளால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாடல் ஆசிரியர் சினேகன்.  சமீபத்தில் இவருடைய தந்தை  101 வயதில் உயிரிழந்தார். இது அவருக்கு மிகப்பெரிய இழப்பை கொடுத்தது. 

இதை தொடர்ந்து தந்தை இழப்பால் துவண்டு இருந்த சினேகன்  பல புதிய படங்களுக்கான பாடல் பணிகளில் ஈடுபட்டு  வந்தார். அந்த நேரத்தில் திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனினும் அதிலிருந்து தனது குடும்பத்தின் பங்களிப்பால் மீண்டு  வந்தார். 

பிக் பாஸ் தமிழ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்ட சினேகன்  அதில்  ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் விரைவில் தங்களுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், அதனையும் கமலஹாசன் தான் முன் நின்று நடத்த வேண்டும் என்று பேசியிருந்தார். 

.இவருடைய கருத்துக்கள் அந்த நேரத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலானது.  அப்போது நடிகை கன்னிகாவைத்தான் அவர் காதலிக்கிறார் என்பது தெரியவில்லை.  அதற்கு பின்பு இவர்களுடைய காதல் பற்றியும், வயது வித்தியாசம் பற்றியும் பல  விமர்சனங்கள் எழுந்தன.


இந்த நிலையில், சினேகன் அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது. அதில் அவர் கூறுகையில், நான் லேட்டா திருமணம் பண்ணினேன்னு நிறைய விமர்சனம் வந்துச்சு. எனக்கு முன்னாடி இருக்கிற மூன்று அண்ணன்களுக்கு திருமணம் செய்ய வேண்டி இருந்தது.

அண்ணன்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டி இருந்தது. நான் என்னோட ஆசை எல்லாம் புறந்தள்ளி விட்டு காத்திருந்தேனே தவிர பொண்ணு கிடைக்காமல் இல்லை  என்று சினேகன் தெரிவித்துள்ளார். 


Advertisement

Advertisement