• Dec 12 2025

“அகண்டா 2” கம்பேக்.. ரசிகர்களின் காத்திருப்பிற்கு கிடைத்த அசத்தலான அப்டேட்.!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

“அகண்டா 2” திரைப்படம், தற்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்து ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி ஸ்ரீனு இணைந்து உருவாக்கிய இந்த திரைப்படம், கடந்த வாரம் டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிவிடப்பட்டது.


இதனால் பாலகிருஷ்ணா ரசிகர்கள் கடும் அப்செட் அடைந்தனர். ரசிகர்கள் படத்தின் ரிலீஸுக்காக சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்பார்ப்புடன் பதிவுகள் செய்தனர்.

இதனிடையே, படத்தின் தயாரிப்பாளர்கள் புதிய ரிலீஸ் தேதி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் படி, “அகண்டா 2” டிசம்பர் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


“அகண்டா 2” படத்தின் கதைக்களம், சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்பான திரில்லர் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை திரையில் இழுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement