பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் கலந்து கொண்டவர் பிரஜின். இவருடன் அவருடைய மனைவி சாண்ட்ராவும் வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் உள்ளே சென்றார். ஆரம்பத்தில் சாண்ட்ராவின் ஆட்டம் வேற லெவலில் காணப்பட்டது. ஆனால் அவர் நாளடைவில் தளர்ந்து போனார்.
இதை தொடர்ந்து கடந்த வாரம் பிரஜின் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் முக்கிய போட்டியாளராக கருதப்பட்டார். இதனால் அவரது திடீர் எலிமினேஷன் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்த நிலையில், தன்னுடைய எலிமினேஷன் சம்பந்தம் இல்லாத ஒன்று என பிரஜின் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் இது Unfair என பலரும் தனக்கு மெசேஜ் அனுப்புவதாகவும், ஆனால் இதைப் பற்றி என்ன சொல்வது என தெரியவில்லை எனவும் பிரஜின் கூறியுள்ளார்.
பிக் பாஸ் என்றாலே எதிர்ப்பாராததை எதிர்பாருங்க என்பதை நான் ஏற்றுக் கொள்வதாகவும், தனக்கு ஓட்டு போட்டு ஆதரவு தெரிவித்த எல்லோருக்கும் நன்றி எனவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ ,
Listen News!