தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை தேவயானி பல ரசிகர்களின் உள்ளங்களைக் கவர்ந்தவர். இவரின் கணவர் மற்றும் இயக்குநர் ராஜகுமாரன் சமீபத்திய நேர்காணலில் தங்கள் வாழ்க்கையின் சில உண்மைகளைப் பகிர்ந்துள்ளார்.

கல்யாணத்துக்குப் பின் தம் வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதை நேரடியாக வெளிப்படுத்திய இவர், அதில் எதிர்கொண்ட சிரமங்களையும், தேவயானியின் ஒத்துழைப்பையும் பகிர்ந்துள்ளார்.
ராஜகுமாரன், “தேவயானிய கல்யாணம் பண்ணுறதுக்கு முன்னாடி வரை ஒரு வீட்டில 1000 ரூபா வாடகைக்கு இருந்தேன். அங்கேயே ஒருத்தர் சமைச்சுக் கொடுத்தாங்க. அதுக்கு மாசம் 500 ரூபா. விண்ணுக்கும் மண்ணுக்கும் படம் செய்யும் வரைக்கும் என்ர மாச செலவே 1500 தான்.

தேவயானிய நான் கல்யாணம் பண்ணப்போ மாத்து துணி கூட இல்லாம வெறும் கையை வீசினு தான் வந்தாங்க. நான் சிறுக சிறுக சேர்த்து வைத்த காசில தான் அவங்களுக்கு துணி கூட எடுத்துக் கொடுத்தேன்.” என்றார்.
இவ்வாறு ராஜகுமாரன் தங்கள் குடும்ப வாழ்க்கையின் பொருளாதார சிரமங்களையும், தேவயானியையும் பற்றி சிறப்பாக கூறியுள்ளார்.
தேவயானி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். நடிகை மட்டுமின்றி, குடும்ப வாழ்க்கையில் தனது கடமைகளையும் திறமையையும் வெளிப்படுத்தி வருகிறார். கல்யாணம் செய்த பின்னர் வாழ்க்கையின் ஆரம்ப கட்டத்தில், பொருளாதார சிரமங்களை எவ்வாறு கடந்தார் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் ராஜகுமாரன்.
Listen News!