விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது பத்தாவது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்திற்கான கேப்டன் ஆக அமித் பார்கவ் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் நீதிமன்றத்தில் இடம்பெறும் டாஸ்க் மிகவும் சுவாரசியமாக இருக்கும். அதன்படி இந்த வாரமும் நீதிமன்றமும் வழக்குகளும் என்ற போட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதில் போட்டியாளர்கள் அனைவரும் இருவர் மீது வழக்கு தொடரலாம். அதில் தேர்ந்தெடுக்கப்படும் வழக்கு குறித்த விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு 67 வது நாளான இன்று முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அனல் பறக்கும் விவாதங்கள் இடம் பெற்றுள்ளதோடு பார்வதியின் முகத்திரை கிழிந்துள்ளது.

அதாவது சபரி புகாரை வாசிக்கும் போது, புகார் அளிப்பவர் அரோரா, குற்றம் சாட்டப்பட்டவர் பார்வதி என்றும் வழக்கை வாசிக்க, கமருதீன் எனக்கு பாரு மேல காதல் இருக்கு என்று உறுதியா சொல்லவே இல்ல என்று அரோரா தன் பக்க நியாயத்தை பேச,
இடையில் வழக்கறிஞராக காணப்பட்ட விக்ரம் , அதாவது அரோரா மீது இவர்கள் எப்படிப்பட்ட அவதூறு பரப்புறாங்கன்னா.. அரோராவ எப்படியாவது வெளியில் அனுப்பனும் என்று கங்கணம் கட்டிட்டு திரிகிறார்கள் என்று வாதிடுகின்றார்.
இன்னொரு பக்கம் கமருதீன் வழக்கறிஞராக கானா வினோத்திடம் , பாரு அரோரா பற்றி அவதூறு பரப்பினாங்களா என்று கேட்கின்றார். அதற்கு பிரச்சினையை இரண்டு பேரும் தனியாக பேசி தீர்த்து இருக்கலாம் என்று வினோத் சொல்லுகின்றார்.
இறுதியாக எதற்கு அரோராவை பார்த்து பயம்? உண்மையை ஒத்துக் கொள்.. உன் முகத்திரை அனைத்தும் கிழிந்து விட்டது.. நீங்கள் யார் என்று நன்றாகவே தெரியும் என்று விக்ரம் வாதித்த வீடியோவுடன் இந்த ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!