• Dec 04 2023

பிக்பாஸ் வீட்டுல அது மிஸ் ஆகுது! அதான் மைனஸ் பாயின்ட்..! அக்‌ஷயாவின் அண்ணன் அபிஷேக் பகீர்

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளர்களுள் ஒருவராக அக்‌ஷயா காணப்படுகிறார். இவர் தற்போது பிக்பாஸ் வீட்டினுள் போரிங் கன்டெஸ்டண்ட் ஆக உள்ளாரென அவர் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்தாலும் அவரின் நல்ல குணம் பலருக்கு தெரிந்து இருக்கும்.

இந்நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் அக்‌ஷயாவின் சகோதரரும், நடிகருமான அபிஷேக் உதயகுமார் தனது தங்கை குறித்து பேட்டி ஒன்றை வழக்கியுள்ளார். அதன்படி அவர் கூறுகையில், 

'சின்ன வயசில இருந்தே எனக்கு நடிப்புன்னா பிடிக்கும். ஷார்ட் பிலிம்ஸ், விளம்பரப் படங்கள்னு கொஞ்ச, கொஞ்சமா பண்ண ஆரம்பிச்சேன். சில படங்களை ரீ- கிரியேட் பண்ணும்போது ஜோடியா நடிக்கிறதுக்கு லேடி கேரக்டர் தேடினால் சுலபமா கிடைக்காது. எனக்கு குக்கு (அக்‌ஷயா)வைத் தான் தெரியும். அதனால அவ கூட சேர்ந்து நடிக்க ஆரம்பிச்சேன். நான் எனக்குத் தெரிஞ்சதை அவளுக்கு சொல்லிக் கொடுத்தேன். அவளுக்கும் இந்தத் துறை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. நிறைய பேர் நாங்க இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான் நடிப்புத்துறைக்குள் வந்ததாக நினைக்கிறாங்க. ஆனாஇ உண்மையில் அதுக்கு முன்னாடியே நான் சினிமாவுக்குள் வந்துட்டேன். அசிஸ்டென்ட் டைரக்டர்இ ஆர்ட் டைரக்டர்னு சினிமா துறையில் நிறைய ஃபீல்டில் வேலை பார்த்திருக்கேன். 


அக்‌ஷயாவும் ஸ்கூல் டிராமாவில் தொடங்கி விளம்பரப் படங்கள் வரைக்கும் பண்ணியிருக்கா. அதுக்குப்பிறகுதான் நாங்க இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பண்ண ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் நாங்க பண்ற ரீல்ஸ் பார்த்துட்டு அண்ணன் - தங்கச்சி எப்படி ஜோடியாக ரீல்ஸ் பண்ணலாம்னு நிறைய விமர்சனங்கள் வந்துச்சு. அப்படி கேட்குறவங்களைப் பார்க்கும்போது, ஹயாருடா இவனுங்க?'னு தான் தோணும். நாங்க ரெண்டு பேர் சேர்ந்து நடிச்சா கூட எங்களுடைய லிமிட்ஸ் எங்களுக்குத் தெரியும். நடிப்புங்கிறது ஒரு கலை அவ்வளவுதான். அதைக் கூட புரிஞ்சிக்காம சிலர் கமென்ட் பண்ணுவாங்க. அதை நாங்க ரெண்டு பேரும் பெருசா எடுத்துக்கிறதில்லை..

நானும், குக்குவும் அப்பாவுக்கு ரொம்ப பயப்படுவோம். ஆனா, அப்பாவே தப்பு பண்ணினாங்கன்னா குக்கு அப்பாகிட்ட கேள்வி கேட்பா. அவ கேட்குற கேள்விக்கு அப்பாகிட்ட பதில் இருக்காது. அந்த அளவுக்கு தெளிவா தப்புன்னா எதிர்த்து கேட்பா. அவளுக்கு கோர்வையா தமிழ் பேசத் தெரியாது. நான் தமிழ் இன்டஸ்ட்ரியில் ரொம்ப வருஷம் இருந்ததால நான் கோர்வையா பேசுறேன். அவளுக்கு என் அளவுக்கு சுலபமா கோர்வையா பேச வராது. நாங்க வீட்டில் மலையாளத்துல தான் பேசுவோம். கோபத்துல எதிர்த்துக் கேள்வி கேட்கும்போது தப்பா பேசிடுவேனோ என்கிற பயத்துல தான் அக்‌ஷயா இன்னும் எதிர்த்து கேள்வி கேட்க தயங்குறா. இது மைனஸ் பாயின்ட் தான். இந்த விஷயத்துல அக்‌ஷயா மாட்டிக்குவான்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல.


பிரதீப் பிரச்னை கூட வெளியில் தப்பா தெரிஞ்சிருக்கு. இத்தனை பேர் அவருக்கு எதிரா சொல்றாங்கன்னா ஏதோ காரணம் இருக்கும். ஆனா, நான் கண்ணால எதையும் பார்க்கலன்னு தான் குக்கு சொல்லியிருப்பா. பிரதீப்பை அக்‌ஷயா ஏமாத்திட்டான்னுலாம் சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. கன்டென்ட்டிற்காக ஒரு விஷயம் குக்கு பண்ண மாட்டா. அவளுடைய திறமையை வெளியே காட்டுறதுக்காகத்தான் அவ வீட்டுக்குள்ள போயிருக்கா. அதுல அவ கவனமா இருப்பா. 

பொதுவாகவே அக்‌ஷயா கோபப்பட்டு, கத்தி சண்டை போட்டு நாங்க யாருமே பார்த்தது இல்ல. அவங்களுக்கு அதிகமா கோபம் வந்தா உடைஞ்சு அழுதிடுவாங்க. அவங்களுடைய வீக்னெஸை கேமரா முன்னாடி காட்டுறதுக்கு அவங்க விரும்பல.

மேலும், நாங்க ரொம்ப மிடில் கிளாஸ் பேமிலிதான். எங்க குடும்பத்துல மீடியாவுக்குள்ள போறேன்னு சொன்னப்ப ஆரம்பத்தில் எனக்கே சப்போர்ட் பண்ணல. அக்‌ஷயாவுக்கு எப்படி சப்போர்ட் பண்ணியிருப்பாங்க? அந்த வீட்டுல 2,3 பேர் எப்பவும் அக்‌ஷயாவைத்தான் டார்கெட் பண்ணிட்டு இருக்காங்க. ஏன்னு தெரியல என தனது தங்கை பற்றி கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement