விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பிரபலமான ஒரு ரியாலிட்டி ஷோவாக காணப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு இறுதியில் ஒரு போட்டியாளர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். அவர்களுக்கு பிரபலத்துடன் கூடிய சினிமா வாய்ப்புகளும் கிடைக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகுவது பல பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் சாதாரண பிரபலங்களுக்கும் ஒரு கனவாக காணப்படுகின்றது. இதற்காக பல பிரபலங்களும் போட்டி போட்டு இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றி வருகின்றார்கள்.
அதன்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று வெள்ளித்திரையில் ஜொலிக்கும் நட்சத்திரங்களும் உண்டு. அந்த வகையில் கவின், லொஸ்லியா, ஜனனி, ரட்சிதா மகாலட்சுமி, பாலாஜி முருகதாஸ் போன்ற பல பிரபலங்கள் பிக் பாஸில் கலந்து கொண்டு இன்று வெள்ளித்திரையில் ஜொலித்து வருகின்றார்கள்.
d_i_a
இந்த நிலையில், இன்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை எவ்வாறு வெளுத்து வாங்கப் போகின்றார் என்பதை பார்ப்போம்.
அதன்படி விஜய் சேதுபதி, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டுக்குள்ள பேய் பிடிச்சிருக்கு.. பிடிச்ச பேய் எல்லாரையும் பிடிச்சதா என்று கேட்டால் இல்லை.. ஆனா பிடிச்சவங்கள புடிக்கல.. பிடிக்காதவங்களை தேடி தேடிப் போய் பிடிச்சுது.. பாஞ்சி கழுத்துல எல்லாம் கடித்தது.
அப்புறம் இரக்கமே இல்லாம விளையாடுங்க என்று சொன்னா நல்லா இறங்கி விளையாடினாங்க.. அது சிறப்பா இருந்துச்சு.. ஆனா சில பேர் பிரண்ட்ஸோட கேங்கா விளையாடி அவங்களுக்காக விட்டுக் கொடுத்து அவங்க விளையாட்ட விளையாடி வீட்டோட விளையாட்டையும் கெடுத்துட்டாங்க என்று தோணுது.. இதனை விசாரிப்போம் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
Listen News!