நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா- 2. இது வெளியாகி 2 நாட்களை கடந்த நிலையில் அமோகமான வரவேற்பு பெற்று வருகிறது. இதில் அல்லு அர்ஜுன், ரஷ்மிக்கா மந்தனா, பஹத் பஷில் உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்தனர்.
புஷ்பா-1 போலவே புஷ்பா -2க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருந்தது அது அனைத்தையும் புஷ்பா பூர்த்தி செய்துள்ளதாக ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இருப்பினும் சில சில விடையங்களினால் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
இப்படி இருக்க புஷ்பா 1 மாபெரும் வெற்றி பெறுவதற்கு நடிகை சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா பாடலும் ஒரு காரணம். நடிகை சமந்தா அந்த திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் அல்லு அர்ஜூனுடன் ஆடி இருப்பார். அது ரசிகர்கள் மத்தியில் படு மாஸாக வைரலானது.
அதே போல புஷ்பா 2 திரைப்படத்திலும் ஒரு பாட்டு இடம்பெற்றிருக்கிறது. அதில் ட்ரெண்டிங் நடிகை ஸ்ரீ லீலா நடனமாடி இருக்கிறார். ஸ்ரீ லீலாவுக்கு தற்போது பயங்கரமாக மவுசு கூடியுள்ளது. அவரது நடனம் பட்டிதொட்டியெங்கும் ட்ரெண்ட் ஆக, இயக்குனர்கள் அவரை ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடச்சொல்லி கேட்டு வருகின்றனர்.
முதலில் இந்த பாடலில் நடிகை ஷ்ரத்தா கபூரை தான் ஆட வைக்கலாம் என்று நினைத்தார்கள்.ஆனால் ஷ்ரத்தா கபூர் ஒரு பாடலுக்கு மட்டும் என்றெல்லாம் ஆடமுடியாது என்று திட்டவட்டமாக கூறி விட்டார். இதை தொடர்ந்து, ஸ்ரீ லீலா இதில் கமிட்டாகி இருக்கிறார்.
இவர் அல்லு அர்ஜூனுடன் ஆடிய கிஸ்க் என்ற பாடலும் வெளியாகி குறுகிய நேரத்தில் பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனையும் படைத்தது. இந்நிலையில் இந்த ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவதற்கு 2 கோடி ரூபாய் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான கோட் திரைப்படத்தில் இடம் பெற்ற மட்ட பாடலுக்கு முதலில் நடனம் ஆடுவதற்கு ஸ்ரீ லீலாவையே வெங்கட் கேட்டார் அவர் ஒரு பாட்டுக்கு ஆட முடியாது என்று கூறி மறுத்த நிலையிலே நடிகை திரிஷா ஆடினார் அந்த பாட்டும் ட்ரெண்டாகியது குறிப்பிடத்தக்கது
Listen News!